Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Wednesday, 23 September 2015

பின் தொடர்கிறது

பல்லியின் வாய்க்குள்
தலை சிக்கிய தும்பியின் சிறகுகள்
போராட்டத்தின்
கடைசி அசைத்தலை
முடித்தது
பகலறையின் தாழ்பாளை
திறந்து வெளியேறுகிறேன்...
பின் தொடர்கிறது
தலையற்ற தட்டானொன்று...

உறைந்து கிடக்கிறது!

உறைந்து கிடக்கிறது
சற்று முன் வரை
மெழுகு குளத்தில்
எரிந்த திரி...
கறுத்த சாம்பல் சர்ப்பமென!

Wednesday, 12 February 2014

ஆழ்கடலில் உறங்கும்
நீ
ஆட்டி வைக்கிறாய்....
கரை மோதி
கனத்த பாறையை உடைக்கிறது
சலனங்களின் பேரலை....
உன்னால் பரிகசிக்கப்பட்ட
பித்தேறிய பிரியங்களை
சுமந்து அலைகிறேன்
வெகுநேரமாய்
சுமைதாங்கி கற்களை
கடந்து பயணிக்கும்
நான்.
உன் வெட்கத்தின் நிறம் வாங்கிய
இந்த அந்தி
இருளுக்கு அழைக்கிறது....
என்னை
கிடாரின் நரம்புகளில்
உரசிப்போகிறது
பட்டாம்பூச்சி...
எழும்பிய இசை
மோனத்தில் ஆழ்த்தியது...
லயித்து கிடக்க
உன் வண்ணம் பூசிக்கொள்கிறது
என் மேனி.

Monday, 10 February 2014

இடைவெளி விட்டு விட்டு
உன் மௌனத்தின் காயங்கள்
இப்போது வாசி
இந்த புல்லாங்குழலை....